பிருந்தாவனம்

அழகிய கவிப்பூங்கா...





« Home


>



Wednesday, February 16, 2011

முதல்நாள் முதல்நட்பு

ஏதுமறியா பள்ளியின் தொடக்க நாள் 
முதன் முறை தாய்  தந்தையின் 
கரங்களை விட்டு தனியே சென்றநாள்
விழிகளில் கண்ணீருடன் ஒரு வித பயமும் 
தந்தையை திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு 
தன்னந்தனியாக நடுக்காட்டில் நடப்பதுபோல் 
வகுப்பறைக்கு மனமின்றி சென்ற தருணம் 
அரவணைப்போடு ஆசிரியர் வகுப்பிற்குள்
அழைத்தாலும் மனம் அதை ஏற்கவில்லை
இருக்கையில்  அவர் அமர்த்தியபோது 
ஓவென்று கதறியழத் துடித்தது மனம் 
சிறைக்குள் அடைபட்டதுபோன்ற உணர்வு
அந்த நொடியில் என் விழிகளில் அவள் முகம் 
அவள் அழகிய சிறு புன்னகையில் 
என் கலக்கம் பறந்தோடியது 
அவளை அருகில் பார்த்தபோதே 
என் தனிமை விலகியது போன்ற 
எண்ணம் என்னுள்
என் கண்ணீரை விலக்கி
பதிலுக்கு புன்னகைத்தேன் 
கண்களால் பேசி முடித்து மழலை 
மொழியில் பேசத்தொடங்கினோம்
அன்றைய பள்ளிப் பொழுது 
கழிந்ததே தெரியவில்லை 
வீட்டிற்கு செல்லும் நேரம் 
அவள் கைகோர்த்து வாசல் வரை 
சென்றேன் இப்போது அவள் கரங்களை
பிரிய மனமில்லை இருப்பினும் 
நாளை மீண்டும் கைகோர்ப்போம்
என்ற எண்ணத்தோடு விடைபெற்றோம் 
மறுநாளின் விடியலை எதிர்நோக்கியவாறு
உற்சாகமாய் வீடு சென்றேன் 
என் நட்பிற்கு தொடக்கப் புள்ளி வைத்த 
இன்பப் பெருமிதத்தில்.....        


                                                   
                                                      

Sunday, February 13, 2011

கல்லுரி நட்பு

நாட்கள் நகர்ந்து  வருடங்கள் கடக்கும் 
நம் வாழ்க்கைப்பாதையில் என்றென்றும்
நிழலாய்த் தொடரும் நம் நட்பின் பெருமை
கண்சிமிட்டி ஓரப்பார்வை பார்க்கும் இந்த 
விண்மீன் கூட்டம் கதை கதையாய் 
சொல்லும் அதன் காலம் முடியும் வரை
சிறுபிள்ளை சண்டையாய் சிலசமயம் 
சிலிர்த்துக்கொன்டாலும் அன்பெனும்
கவசத்தால் காத்துக்கொண்டோம் நம் நட்பை 
ஒரே பிரசவத்தில் எண்ணற்ற மலர்களை
தந்த இந்த கல்லுரித்தாயை
நினைத்தாலே இனிக்கும்.
நம் நட்பின் தூரம் அந்த அடிவானம் செல்லும்...

                                                   

Saturday, February 12, 2011


புல்லாங்குழலே  பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும்  ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரி பாதி
கண்களை வருடும் தேனிசையே
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால்
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்...
உறக்கம் இல்லா முன்னிரவில் என்
உள் மனதில் ஒரு மாறுதலா
இறக்கம் இல்லா இரவுகளில்  
இது எவனோ அனுப்பும் ஆறுதலா
எந்தன் சோகம் தீர்வதற்கு
இதுபோல் மருந்து பிறிதில்லையே
அந்தக்குளலைப்போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனக்கில்லையே...  
              



             

 


 

Friday, February 11, 2011

காத்திருப்பு...

அன்றொருநாள் அந்திசாயும் வேளை
ஜன்னலோரம் உன் விம்பம்
அன்றிலிருந்து ...
    என் இமைகள் இமைக்க மறந்துவிட்டன
    உன்ன்னைப்பர்த்த விழிகள் வேறு எதையும்
    காண மறுக்கின்றன
    உன்னை மட்டும் திரும்ப திரும்ப காண ஏங்குகின்றன
    முகவரி தெரியாத   உன்னை  தேடி
    தெரிந்த என் முகவரிஜை தொலைத்து நிற்கிறேன் 
    நீ வீசிச்சென்ற பார்வையின்  அர்த்தம் புரியாமல் 
    தினம் தினம் தவிக்கிறேன்
    மீண்டும் ஒருமுறை என் முன் வந்துவிடு
    அந்த நிமிஷமே  உன்னுள் கலந்துவிடுகிறேன் 
    உயிர்  பிரியும்வரை உன்னைவிட்டு ஒரு கணமும் பிரியமாட்டேன்
     உனக்காக காத்திருக்கிறேன்...
    
மீண்டும் ஒருமுறை  வருவாயா?


     

பனிக்காலம்....

வானம் வாழ்த்தும்
வெள்ளைப் பூக்களால்
வையகம் விதவை.
பனிப்போர்வைக்குள்
பூமிக்கு முதலிரவு.
கள்ளப்பிள்ளை
கோடையில்தான் பிறக்கும்.
விறைத்துப்போன பனித்தேசத்தில்
குறைத்துப் பார்க்கும் பார்வைகளால்
விறைத்துக் கிடக்கும் உணர்வுகள்.
அகத்தி ஆயிரம் பூ பூத்தாலும்
விறத்தி பிறத்தி தானே
பனிப்பஞ்சுடன் பஞ்சாகி
பஞ்சந்தீர்க்கவந்த வெளிநாட்டுக் காகங்கள்
தோட்டி தேடும்.
தோட்டியிலும்
காட்டிக் கொடுக்கும் போட்டிகள்
ஐந்நூறு வருட
காலணித்துவ அடிமைவாழ்வின்
விழித்துக் கொள்ளும் விழுமியங்கள்.
குளிர்நாட்டுக் குருவிகள்
விசாவின்றி எமது தேசங்களில்
உண்டு திண்டு முட்டையிடும்
கண்ட நிண்ட இடங்களில் எச்சமிடும்
வண்ணாத்திகளுக்கு இங்கோ
விசா வேண்டும்.
பனிப்பாலைவனங்களில்
பணத்துக்காய் பறக்கும்
பார்வை இழந்த வண்ணாத்திகள்
வர்ணம் இழந்து போனாலும்
வசந்தம் கொண்டாடும்.
விடியாத தேசங்களில்
விடியுமா வாழ்க்கை?
ஊரில் விதைத்தது கூட
இங்கேயே அறுக்கப்படுகிறது
கல்வியும் களவுமாய்.
தேவடியாள் தேசம் என்றவர்கள்
தேவடியாள் தேசம் தேடி
தேவடியாளருக்கு
தேவை அடியாள் என்று
தேடித் திரிகின்றனர்
தேவர்கள்.
கோவலர்கள் எல்லாம்
மாதவியின் மையலில்...!
இருப்பினும்
தெருவில் விலைப்படும் தேவடியாள் கூட
தேவையில்லை என்கிறாளே
தேவர்கள் தேடிய பணத்தை.
கறுத்துத்தானே கிடக்கிறது
காகங்களின் காசு.
ஊரில் வழுக்கி விழுந்தவளின்
வாழ்க்கை சிதறும்
இங்கே வழுக்கி விழுந்தால் தான்
வாழ்க்கையே வளரும்.
வழுக்கி வழுக்கி விழுந்தே
ஒட்டாது போய்
வழுக்கியது வாழ்க்கை
விறைத்துப்போன
விளைச்சலில்லாத விளை நிலங்களில்
மனித விளைச்சல்களைத் தேடுகிறோம்.
விடியாத தேசங்களில்
விடியுமா வாழ்க்கை?
விடிவைத்தேடி..